சுமார் 7 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் ரக போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஐந்து பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்த 30 வ…

சுமார் 7 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் ரக போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஐந்து பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கேகாலை பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர்களாவர். இவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இவர்கள் இன்றைய தினம் அதிகாலை 04.30 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ருடு-405 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள், 06 கிலோகிராம் 110 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருளையும், 11 கிலோகிராம் 62 கிராம் குஷ் ரக போதைப்பொருளையும் 15 கண்ணாடிப் போத்தல்களில் அடைத்து கொண்டு வந்துள்ளனர். அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் மறைத்து வைத்து எடுத்துவர முற்பட்ட போதே பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.