அநுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 12 கிலோவிற்கும் அதிக எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மன்னாகுளம் பகுதியில் இந்…

அநுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 12 கிலோவிற்கும் அதிக எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மன்னாகுளம் பகுதியில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இரகசியத் தகவல் அநுராதபுரம் வட மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சந்தேக நபரிடமிருந்து 12 கிலோ கிராம் மற்றும் 320 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் தம்மன்னாகுளம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வட மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.