விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் ரஞ்சித் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பவத்தன்று கடையில் இருந்து வீட்…
விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூர் பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் ரஞ்சித் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பவத்தன்று கடையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த 15 வயதுடைய மாணவிக்கு ரஞ்சித் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், ரஞ்சித்தை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

