நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு, 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். 2026 ஜூன்…

நான்கு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு, 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

2026 ஜூன் 9 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யுமாறு, சரண குணவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது, வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குறித்த ஆணைக்குழு 2022 ஆம் ஆண்டில் அவர் மீது நான்கு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது.