தனியார் விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பரப் பலகைக்கான வரி ஆவணங்களை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக 5,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான காலி மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் மற்றும் களப்பணியாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்ப…
தனியார் விற்பனை நிலையம் ஒன்றின் விளம்பரப் பலகைக்கான வரி ஆவணங்களை விரைவாகப் பெற்றுத் தருவதற்காக 5,000 ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான காலி மாநகர சபையின் வருமானப் பரிசோதகர் மற்றும் களப்பணியாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய தினம் (03) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார். இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர் நீதிமன்றில் தாமாக முன்வந்து வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

