கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு பதப்படுத்தும் மையத்தில், 500 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள வைத்தியசாலைகளிலிருந்து ம…
கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு பதப்படுத்தும் மையத்தில், 500 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிலுள்ள வைத்தியசாலைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிமருந்துகள் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.உலர்த்தப்பட்ட நஞ்சுக்கொடி
இந்தக் கும்பல், பல்வேறு வைத்தியசாலைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 200 கிலோகிராம் மனித நஞ்சுக்கொடியை வாங்கியதாக பாகிஸ்தானின் மத்திய விசாரணை முகாம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவை உலர்த்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக அந்த முகாம் தெரிவித்துள்ளது.
நஞ்சுக்கொடியைச் சேமித்து பதப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட" ஒரு வீட்டின் உள்ளே, தள்ளுவண்டிகளில் உலர்த்தப்பட்ட நஞ்சுக்கொடி அடுக்கி வைக்கப்பட்டிருப்பது புகைப்படங்களில்,காட்டப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு பகிர்ந்துள்ளது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வியட்நாமுக்கு அனுப்பப்படவிருந்த 100 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி கடத்தலை எப்.ஐ.ஏ அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதில் பிடிபட்ட ஐந்து சந்தேக நபர்களும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள வைத்தியசாலைகளிலிருந்து ஒரு நஞ்சுக்கொடியை சுமார் 800 ரூபாய்க்கு வாங்கியதாக, பாகிஸ்தானின் மனித உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரி ஹினா கன்வால் தெரிவித்துள்ளார்

