இலங்கை இராணுவத்தின் மிகச்சிறந்த வீரரான லெப்டினன்ட் சாந்த ஜயதிலக, யுத்தக் களத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புகளுக்காக 'வீர விக்ரம விபூஷண' மற்றும் 'ரணசூர' உள்ளிட்ட 7 பராக்கிரம பதக்கங்களை வென்றவராவார்.கடந்த யுத்த காலத்தில் உயிருடன் இருக்கும் போதே ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த…
இலங்கை இராணுவத்தின் மிகச்சிறந்த வீரரான லெப்டினன்ட் சாந்த ஜயதிலக, யுத்தக் களத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புகளுக்காக 'வீர விக்ரம விபூஷண' மற்றும் 'ரணசூர' உள்ளிட்ட 7 பராக்கிரம பதக்கங்களை வென்றவராவார்.கடந்த யுத்த காலத்தில் உயிருடன் இருக்கும் போதே ஒரு இராணுவ வீரரினால் பெறப்பட்ட மிக உயர்ந்த விருதான 'வீர விக்ரம விபூஷண' விருதை கொச்சைப்படுத்தும் வகையில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அவமதிப்பாகப் பேசியுள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று(6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், "மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு எனத் தனிப்பட்ட சட்ட அதிகாரம் எதுவும் இல்லை. அவர் சட்டமா அதிபரின் பிரதிநிதியாகவே நீதிமன்றில் முன்னிலையாகின்றார். ஜனாதிபதியினால் முறையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ பதக்கங்களையே, அரசின் கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரி 'தகடுத் துண்டுகள்' எனக் கூறி அவமதித்துள்ளார். யுத்தக் களத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பெற்ற இத்தகைய பதக்கங்களை, அரசின் கைக்கூலியாகச் செயற்பட்டு இராணுவ வீரர்களை அவமதிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை திலீப பீரிஸுக்கு நினைவூட்டுகின்றேன்.
சாந்த ஜயதிலகவின் சீருடையில் இருந்த 7 பதக்கங்களையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார்.சட்டத்தரணி பதவியை இழப்பார்'ஒரு தகடு அடித்துவிட்டுச் சென்றாலும் 10 இலட்சம் வழங்கப்படும்' என ஜனாதிபதி கூறியிருந்ததை மனதில் வைத்து, இந்த 7 பதக்கங்களுக்கும் சேர்த்து 70 இலட்சம் ரூபாவை ப் பெற்றுக்கொள்ளும் பேராசையில்தான் திலீப பீரிஸ் இவ்வாறு இராணுவ வீரர்களை அவமதித்தாரோ என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. உயர் நீதிமன்ற விதிகள் 53 மற்றும் 54 இன் படி, ஒரு சட்டத்தரணி நீதிமன்றில் வாதிடும் போது சந்தேகநபர்களையோ அல்லது மூன்றாம் தரப்பினரையோ அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது.] தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திலீப பீரிஸ் இந்த விதிகளை மீறியுள்ளதால், அவரது சட்டத்தரணி தொழிலை இரத்துச் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான பின்னணி தற்போது உருவாகியுள்ளது.
நல்லாட்சி அரச காலத்தில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட போலி வழக்கின் போது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விகாரை நிகழ்வொன்றில் பங்கேற்க தமக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய போது, திலீப பீரிஸ் அதனை 'நாட்டை விட்டுத் தப்பியோடும் சதி' எனக் கூறி நீதிமன்றில் எவ்வாறு அவமானப்பட்டார் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.கடுமையான நெருக்கடி
அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்து, மேலும் பலர் காயமடைந்த சம்பவத்துக்கு அதிகாரிகளையோ அல்லது கைதிகளையோ மட்டும் குறை கூற முடியாது. சிறைச்சாலைகளுக்குள் நிலவும் கடுமையான நெருக்கடியே இந்த மோதல்களுக்கு முக்கிய காரணமாகும்.
சிறைச்சாலைகளின் மொத்தக் கொள்ளளவு 10 ஆயிரத்து 395 கைதிகள் ஆகும். ஆனால், 2026 ஜூன் 29 நிலவரப்படி அங்கு 42 ஆயிரத்து 34 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கழிவறை வசதிகள், உணவு, உறங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் கைதிகளுக்கு இடையே நாளாந்தம் மரணப் போராட்டம் நிலவுகின்றது. இது கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரையும் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ள போதிலும், சிறைச்சாலைகளின் கொள்ளளவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்குத் தீர்வாக சிறைச்சாலைகளை அதிகரிப்பதை விடுத்து, நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் திறனையும் அதிகரிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொடவின் தரவுகளின்படி, இலங்கையில் ஒரு நீதிமன்றத்தில் சராசரியாக 3 ஆயிரத்து 303 வழக்குகள் விசாரணையில் உள்ளன.பொலிஸாரிடம் முறைப்பாடு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட சராசரியாக 10 வருடங்களும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. மேல்முறையீடுகள் செய்யப்பட்டால் இந்தக் காலம் மேலும் நீடிக்கும். வழக்குகள் தாமதமாவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் தாமதமாதல் மற்றும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாதல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் உள்ளன. எனவே, அரசு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இந்த அறிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய சிறைக்கைதிகளில் 75 சதவீதமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர். வழக்குகளை விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்கும் போது சிறைச்சாலைகள் தானாகவே காலியாகும். நீதி விரைவாக நிலைநாட்டப்படும் போது மக்கள் சட்டத்துக்குப் பயந்து குற்றச் செயல்கள் குறையும்." என்றார்.

