80,000 ரூபாய் நிலுவையால் அளுத்கம ரயில் நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டிக்கப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 80,000 ரூபாய் மின்சாரக் கட்டணத்தை நீண்ட நாட்களாகச் செலுத்தத் தவறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிக…
80,000 ரூபாய் நிலுவையால் அளுத்கம ரயில் நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டிக்கப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
80,000 ரூபாய் மின்சாரக் கட்டணத்தை நீண்ட நாட்களாகச் செலுத்தத் தவறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் கடும் அசௌகரியங்களைச் சந்திப்பார்கள்
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் ஒலிபெருக்கி அறிவிப்புகள் செயலிழப்பு, இதனால் ரயில்களின் வருகை, புறப்பாடு மற்றும் தாமத விபரங்களை அறிய முடியாமல் அன்றாடம் மற்றும் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் கடும் அசௌகரியங்களைச் சந்திப்பார்கள் .
ரயில்வே திணைக்களத்தின் இந்த அலட்சியப் போக்கு, பொதுமக்களின் பயணங்களைப் பாதிப்பதோடு, திணைக்களத்தின் பலவீனமான மேலாண்மைச் சிக்கலையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அதேவேளை இதற்கு முன்னரும் இவ்வாறான நிர்வாகக் குளறுபடிகள் காரணமாகப் பல ரயில் நிலையங்களின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

