ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், 173 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெ…
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜுர்ம் (Jurm) பகுதியில் நேற்று நள்ளிரவு 5.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 11.27 மணியளவில், 173 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடர் பகுதி உலகின் அதிக நில அதிர்வு செயற்பாடு காணப்படும் மண்டலங்களில் ஒன்றாகும். இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் மோதும் பகுதியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால், அந்நாடு அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது.
மேலும், ஹெராட் உள்ளிட்ட பகுதிகள் வழியாக முக்கிய புவிப்பிளவு கோடுகள் அமைந்துள்ளதால், நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பருவகால வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிகளவில் உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

