நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(28.06.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து அம்பாள் விநாயகப்பெருமன், முருகன் வள்ளி தெய்வானையோடு உள்வீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தேர் திருவிழாஅதன் பின்னர், விநாயகப் பெருமான் முதல் தேரில் வலம்வர,…

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று(28.06.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து அம்பாள் விநாயகப்பெருமன், முருகன் வள்ளி தெய்வானையோடு உள்வீதி வலம் வரும்  நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தேர் திருவிழாஅதன் பின்னர், விநாயகப் பெருமான் முதல் தேரில் வலம்வர, வள்ளி தெய்வானை சமேதராய் முருகப் பெருமான் இரண்டாவது தேரில் முன்னே செல்ல, நாகபூசணி அம்பாள் மூன்றாவது தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.

இதனையடுத்து, பக்தர்கள் பாட்டுக்காவடி, பால்காவடி, தூக்குக்காவடி, கற்பூரச்சட்டி மற்றும் பாற்குடம் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்துள்ளனர்.