ஐரோப்பிய கண்டத்தை உலுக்கி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் 2,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. பிரான்சில் கடந்த ஜூன் 24 அன்று வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக பாரிஸ் நகரில் 41 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவா…

ஐரோப்பிய கண்டத்தை உலுக்கி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் 2,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரான்சில் கடந்த ஜூன் 24 அன்று வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக பாரிஸ் நகரில் 41 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அதிகரித்துள்ள உயிரிழப்பு இதனால் ஜூன் 22 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் மரணங்களின் எண்ணிக்கை 29% உயர்ந்து, 2,025 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரிஸ் நகரில் மட்டும் மரணங்கள் 62% அதிகரித்துள்ளன.இதுமட்டுமின்றி, பெல்ஜியத்தில் வழக்கத்தை விட 39% கூடுதலாக 1,222 மரணங்களும், நெதர்லாந்தில் 480 மரணங்களும் பதிவாகியுள்ளன.

வெப்பத்தைத் தணிக்க நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், பிரான்சில் மட்டும் ஜூன் 18 முதல் 72 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக பிரான்சின் தெற்குப் பகுதியில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

இந்த கோடைக்காலம் தொடங்கியது முதல் இதுவரை 7,000 காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டு, 8,700 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் சாம்பலாகியுள்ளன.ஐரோப்பாவில் அதிகரித்துள்ள வெப்பநிலை 'செயின்ட் மேரி-லா-மெர்' பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

copernicus பருவநிலை அமைப்பின்படி, உலக சராசரியை விட ஐரோப்பா இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது.இந்த வார இறுதியில் பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெப்பநிலை மீண்டும் 40 பாகை செல்சியஸைத் தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர்த்துகல் நாடு செவ்வாய்க்கிழமை வரை அவசர நிலையை அறிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவிலும் ஜூலை 4 சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையே மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.