ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே மாதத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், எதிர்வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக…

ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரே மாதத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், எதிர்வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்தந்த நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்கிரமடையும் வெப்பம் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நீடித்த இந்த வெப்ப அலையே, ஐரோப்பிய வரலாற்றில் பதிவான மிக மோசமான வெப்பம் என பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மின் உற்பத்தி, நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூரமான சூழ்நிலைக்கு உலகளாவிய காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் ஆரம்பகட்ட தரவுகள் மட்டுமே என்பதால், உண்மையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.