அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் தொடக்க வார இறுதியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டியும், ஜனநாயக சோசலிஸ்டுகளைக் கடுமையாக விமர்சித்தும் உரையாற்றியுள்ளார். சுதந்திர தினத்தின் முன்னிரவில் தெற்கு டகோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக…
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் தொடக்க வார இறுதியில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டியும், ஜனநாயக சோசலிஸ்டுகளைக் கடுமையாக விமர்சித்தும் உரையாற்றியுள்ளார்.
சுதந்திர தினத்தின் முன்னிரவில் தெற்கு டகோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மவுண்ட் ரஷ்மோர் நினைவிடத்தின் கீழ் உரையாற்றிய அவர், வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை மனதில் வைத்து தேசிய அடையாளம் மற்றும் கொள்கைகள் குறித்துப் பேசியுள்ளனர்.அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் அமெரிக்கா உலகின் மிக வலிமையான இராணுவத்தை உருவாக்கியுள்ளதாகவும், இரு உலகப் போர்களை வென்றதுடன், ஒரே நாளில் வெனிசுலாவை வீழ்த்தி, ஈரானையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலை உயர்வு குறித்து வாக்காளர்கள் கவலை தெரிவித்து வரும் வேளையில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்காக "நாங்கள் நல்லவர்களாக இருந்ததால் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளோம்" என ஜனாதிபதி ட்ரம்ப் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது உரையின் பெரும்பகுதி உள்நாட்டு கொள்கை ரீதியான அச்சுறுத்தல்கள் குறித்தே அமைந்திருந்தது.
அமெரிக்காவிற்குள் நுழைந்து நாட்டின் வாழ்வாதாரத்திற்கு முற்றிலும் எதிரான கருத்துக்களைக் கொண்ட புதியவர்களால் 'கம்யூனிச அச்சுறுத்தல்' மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறிய அவர், கம்யூனிசத்தை அரசியலமைப்பின் எதிரி என்று சாடியுள்ளனர்.ஜனநாயக சோசலிஸ்டுகளின் எழுச்சியை அமெரிக்கா உருவானதிலிருந்து எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஜனாதிபதி ட்ரம்ப் வர்ணித்தார்.
இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த உரையை விமர்சித்துள்ள ஜனநாயகக் கட்சி மூலோபாயவாதி அமேஷியா கிராஸ், ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றைத் துடைத்தெறிய விரும்புவதாகவும், சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 'பிறப்புரிமை குடியுரிமையை' இரத்து செய்ய முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றமே அவரது இந்த ஆக்ரோஷப் பேச்சுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

