அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, குடியேறிகளை இரக்கத்துடனும் தாராள மனதுடனும் வரவேற்றுப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க மக்களுக்கு பாப்பரசர் லியோ அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளின் பிரதான எல்லையாகத் திகழு…
அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, குடியேறிகளை இரக்கத்துடனும் தாராள மனதுடனும் வரவேற்றுப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்க மக்களுக்கு பாப்பரசர் லியோ அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளின் பிரதான எல்லையாகத் திகழும் இத்தாலியின் லம்பேடுசா தீவுக்கு சனிக்கிழமை விஜயம் செய்த பாப்பரசர், அங்கிருந்தவாறே தனது சொந்த நாடான அமெரிக்காவிற்கு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கை கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை "மனிதநேயமற்றது" என்று விமர்சித்து அவரது கோபத்திற்கு ஆளான பாப்பரசர் லியோ, போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஓடிவரும் அகதிகளுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய தரைக்கடலைக் கடந்து இந்த ஆண்டு மட்டும் 7,000 இற்கும் அதிகமான அகதிகள் லம்பேடுசா தீவிற்கு வந்துள்ளனர்.
ஆபத்தான கடல் வழிப்பயணங்களின் போது இந்த ஆண்டில் மட்டும் 28 குழந்தைகள் உட்பட 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் காணாமல் போயுள்ளனர்.
இந்தத் தீவில் வாழும் 6,000 உள்ளூர் மக்களை விட இங்கு தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.அகதிகள் பிரச்சினைக்கு நிவாரணம்
இந்த நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் அகதிகள் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் வழங்குவதோடு மட்டுமன்றி, அவர்களின் சொந்த நாடுகளில் நிலையை மேம்படுத்த நீண்டகால மூலோபாயத் திட்டங்களை வகுக்க வேண்டும் என பாப்பரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2025 மே மாதம் பாப்பரசராகப் பொறுப்பேற்றது முதல் குடியேறிகளுக்கான ஆதரவை தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள பாப்பரசர் லியோ, அமெரிக்காவின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு இணையாக இந்த லம்பேடுசா விஜயத்தைத் திட்டமிட்டிருந்தார்.
அங்குள்ள அகதிகள் கல்லறைத் தோட்டத்தில் அஞ்சலி செலுத்திய அவர், எல்லையைக் காப்பதைக் காட்டிலும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் பகிரப்பட்ட பொறுப்பிற்குமே உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற வலுவான செய்தியை இந்த விஜயத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

