அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள இராணுவ மோதல்கள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திக்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், சர்வதேச அளவில் மசகு எண்ணெய் போக்குவரத்திற…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள இராணுவ மோதல்கள் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திக்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், சர்வதேச அளவில் மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணையில் சுமுகமான கப்பல் போக்குவரத்து திரும்புமா என்ற ஐயம் எழுந்துள்ளது.மசகு எண்ணெய் விலை இதன் எதிரொலியாக இன்று(29.6.2026) சர்வதேச மசகு எண்ணெய் விலையின் முக்கிய அளவீடான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0.9 சதவீதம் உயர்ந்து ஒரு பெரல் 73.21 டொலராக வர்த்தகமானது. போர் நிறுத்தம் எட்டப்படும் என்ற உலக முதலீட்டாளர்களின் அதீத நம்பிக்கை, இந்தத் தொடர் தாக்குதல்களால் தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

