2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடத்தும் கோட்பாடுகளுக்கு முரணாக அமெரிக்கா செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது ஈரான் கால்பந்து அணி மிகவும் "அரசியல்மயமாக்கப்பட்ட" முறையில் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எ…

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரை நடத்தும் கோட்பாடுகளுக்கு முரணாக அமெரிக்கா செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது ஈரான் கால்பந்து அணி மிகவும் "அரசியல்மயமாக்கப்பட்ட" முறையில் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா உலகக் கிண்ணம் ஆரம்பத்திலிருந்தே விசா வழங்குவதில் கடுமையான சிக்கல்கள் இருந்ததாகவும், தொழில்நுட்பக் குழுவின் கணிசமான உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஈரான் தேசிய கால்பந்து அணி போட்டிகள் நடைபெறும் இடத்திற்குப் பதிலாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது என்று பாகேய் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஈரான் அணி வெளியேறியதை "மகிழ்ச்சியான நடனமாடி" கொண்டாடியதாகக் கூறிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் மார்க்வைன் முல்லினின் கருத்தையும் ஈரான் வெளியுறவுத்துறை கடுமையாகக் கண்டித்துள்ளது.

உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடு நடுநிலையோடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை விதியை அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.