அமெரிக்காவில் தற்காலிகப் பாதுகாப்பு கீழ் தங்கியிருக்கும் பிற நாட்டவர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் நிரந்தரக் குடியுரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லையெனின் தங்களது நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள…
அமெரிக்காவில் தற்காலிகப் பாதுகாப்பு கீழ் தங்கியிருக்கும் பிற நாட்டவர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் நிரந்தரக் குடியுரிமைக்கான சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இல்லையெனின் தங்களது நாடுகளுக்கு திரும்ப வேண்டும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று(28.06.2026) அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்வைன் முல்லின் வெளியிட்டுள்ளார். புலம்பெயர்ந்தவர்களுக்கான அறிவிப்பு இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்கள் முறையான ஆவணங்களை பூர்த்தி செய்து இங்கு நிரந்தரமாக வசிக்க முற்பட வேண்டும், தவறினால் அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான உதவிகளை நாங்கள் செய்வோம் என்றார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விதிகள் தீவிரமாக முறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு தற்காலிக விசா மற்றும் பாதுகாப்பு அனுமதிகளின் கீழ் அங்கு வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பூர்வ வழிகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

