பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமாரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று ந…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமாரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று(02.07.2026) உத்தரவிட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் - கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.பொலிஸ் விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணைகளை கடந்த கால அரசாஙகம் முன்னெடுத்து வந்தது.

இதையடுத்து இந்த படுகொலை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவி கடந்த 2025ஆம் ஆண்டு சிஐடி இனரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.இதனையடுத்து, அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த 2025 ஜூலை 6ம் திகதி திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.நீதிமன்ற உத்தரவு கைது செய்யப்பட்ட இவர்களை சிஜடி இனர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 6 மனித படுகொலைகளுடன் தொடர்புட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவரை ஒரு வருட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வைத்திருந்த சிஐடியினர் இவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று(02) முன் நகர்வு பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது இவரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இருந்து விடுத்துள்ளதாக சிஜடியினர் நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து நீதவான் இவரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.You may Like THis..