அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(04.07.2026) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. மூவர் கைது சம்பவம் தொடர்பில் மே…

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(04.07.2026) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

மூவர் கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று பொலிஸாரால் வீதியில் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 32 ,33, 34 வயது மதிக்கதக்க இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், வங்கி அட்டைகள், சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் சான்றுப்பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.