ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு எப்போதும் வக்ர கதியில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். கிரகங்களில் ராகுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில் ராகு ஜூன் 30 ஆம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழை…

ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் ராகு. இந்த ராகு எப்போதும் வக்ர கதியில் பின்னோக்கி பயணிக்கக்கூடியவர். கிரகங்களில் ராகுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை. தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில் ராகு ஜூன் 30 ஆம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.ராகு செவ்வாயின் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் அங்காரக யோகமானது சக்தி வாய்ந்த மற்றும் உக்கிரமான யோகமாக கருதப்படுகிறது. இப்போது ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் உருவாகும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.மேஷம் அங்காரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முதலீடுகளை செய்வதற்கு முன்பும் பலமுறை யோசித்து பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் நிதி தொடர்பான விஷயத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் தவிர்க்க வேண்டும்.விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்கள் அங்காரக யோகத்தால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிக செலவுகளால் பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எதிலும் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசரப்பட்டு எதிலும் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையை செய்தாலும் அதில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்க நேரிடலாம்.தனுசு அங்காரக யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான எந்த ஒரு விஷயங்களிலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் பேச்சு பல பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் தலைத்தூக்கும். இதனால் மன அமைதி பாழாகும்.