நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அரசியல் களத்தில் பல்வேறு பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ச…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அரசியல் களத்தில் பல்வேறு பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை மற்றும் உயிரிழப்புக்களுக்கு ஜனாதிபதியின் பொறுப்புக்கூறலை எதிர்தரப்புக்கள் கோருகின்றன. உண்மையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இது ஒரு சவாலான தருணமாக மாறியுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்கின்றனவா என்ற கேள்வி சாதாரணமாகவே எழுகின்றது. ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் உள்ளிட்ட பல முக்கிய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமடைந்து வரும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக, அநுரவின் ஆட்சியை நிலைகுலைய வைக்கவும், விசாரணைகளைத் திசைதிருப்பவும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில், இந்த பதற்றநிலைக்கு முந்தைய அரசாங்கங்களின் முக்கிய புள்ளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,