அண்மையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் அவர் கட…

அண்மையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேக நபர், பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மே உட்பட மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆபத்தான அதிகாரிஇது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரி கெஹெல்பத்தர பத்மேயுடனும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.குறித்த அதிகாரி 2023ஆம் ஆண்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்த காலப்பகுதியில், பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு இந்த போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு அதன் பதில் நீதவான் யசந்த பெரேரா உத்தரவிட்டார்.

“சந்தேக நபர் கரந்தெனிய ராஜுவுக்காக போலி கடவுச்சீட்டினை தயாரித்துள்ளார். 50 மனிதக் கொலைகள்படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் கோரிக்கைக்கு அமையவே அதனை தயாரித்துக் கொடுத்துள்ளார்” என சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் மிகவும் பயங்கரமாக பாதாள உலகத் தலைவராக கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான கரந்தெனிய ராஜு கருதப்படுகின்றார். தற்போது வரையில் 50 மனிதக் கொலைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாயில் இருந்து இந்தியாவுக்கு சென்று, அங்கிருந்து ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கரந்தெனிய ராஜுவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, குற்றவாளியான குற்றம் சாட்டப்பட்டவருக்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்த இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர் இவர் கண்டியைச் சேர்ந்த ஜனாதிபதி செயலகத்தின் 41 வயதுடைய சிரேஷ்ட உதவிச் செயலாளர் என்பது தெரியவந்தது.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளில், அவர் இதேபோன்று போலி கடவுச்சீட்டுகளை தயாரித்துக் கொடுத்த மேலும் பல பாதாள உலகக் குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளது.