அநுரவை வீட்டிற்கு அனுப்பும் வேலைப்பாடுகளை செய்வதற்கு அவர் இறுக்கத்தின் தாக்கத்தினை முன்னாள் அரசியல்வாதிகளால் தாங்க முடியாத நிலையே என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு க…

அநுரவை வீட்டிற்கு அனுப்பும் வேலைப்பாடுகளை செய்வதற்கு அவர் இறுக்கத்தின் தாக்கத்தினை முன்னாள் அரசியல்வாதிகளால் தாங்க முடியாத நிலையே என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பல போலி போராட்டங்கள், வதந்திகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது விசாரணை கோட்டபய பக்கம் திரும்பியுள்ளது.

ஷானி அபேசேகரவை இந்த விவாகரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இது தொடர்பில் சுரேஷ் சலேவின் மனைவியும் சில எழுத்து மூல ஆவணங்களை கொடுத்துள்ளார்.

அநுரவை வீட்டிற்கு அனுப்புவதற்கு எந்தவித காரணங்களும் இல்லை, அவர் முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடத்தும் இறுக்கமான விசாரணையே அநுர கோ ஹோம் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்று சமகால அரசியலில் நடக்கும் கட்டவிழ்கப்படாத விடயங்கள் தொடர்பில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.