தன் மீதான குற்றச்சாட்டுக்கள் , அனுர வாயை போல எல்லாமே பொய் என பிள்ளையான் நீதிமன்றத்தை விட்டு செல்கையில் கத்தியபடி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன…

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் , அனுர வாயை போல எல்லாமே பொய் என பிள்ளையான் நீதிமன்றத்தை விட்டு செல்கையில் கத்தியபடி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் கைவிலங்க்கிடப்பட்டு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட பிள்ளையானிடம், அரசாங்கம் உங்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளதாக கேள்வி எழுப்பியபோது அனுர வாயை போல எல்லாமே பொய் குற்றச்சாட்டுக்கள் என பிள்ளையான் கத்தியபடி தெரிவித்துள்ளார்.