அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமனம் பெறும் இடத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.அத்தோடு, எந்தக் காரணம் கொண்டும் அந்த காலப்பகுதிக்குள் நியமனங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவர…

அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமனம் பெறும் இடத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர்  ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.அத்தோடு, எந்தக் காரணம் கொண்டும் அந்த காலப்பகுதிக்குள் நியமனங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நிதி ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலம் அரச சேவையை வெற்றிகரமானதாக மாற்றியமைக்க நம்மால் முடியும். கடந்த காலத்தில் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்றொரு திட்டம் இருந்தது. நான் அந்த கருத்தாக்கத்துடன் உடன்படவில்லை.நியமனங்கள் இப்போது புதிய நியமனங்களைப் பெறுபவர்கள் 'அருகிலுள்ள அலுவலகமே சிறந்த அலுவலகம்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த நியமனங்கள் மாவட்ட நியமனங்கள் அல்ல, இவை கிழக்கு மாகாண நியமனங்கள் என்பதை அனைவரும் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு விசேட விடயத்தைக் கூற வேண்டும். நியமனம் பெறும் இடத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அந்த காலப்பகுதிக்குள் நியமனங்கள் மாற்றப்பட மாட்டாது.நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், சிலர் அம்மாவுக்கு சுகமில்லை, அப்பாவுக்கு சுகமில்லை அல்லது மனைவிக்கு சுகமில்லை என்று கூறி நியமனங்களை மாற்றிக்கொள்ள வருகிறார்கள். நமது சேவை எங்கு தேவைப்படுகிறதோ, அங்கு நாம் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நாம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தமக்குத் தேவையான இடங்களில் சேவை செய்ய முற்படும்போது அரச சேவையின் சமநிலை சீர்குலைந்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.