அரச திணைக்களம் ஒன்றின் வாகனத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், முதியவ…
அரச திணைக்களம் ஒன்றின் வாகனத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது 80) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும், குறித்த முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

