20 கிலோ கிராம் அரிசியை தவணை முறையில் வாங்கும் அளவுக்கு துயர நிலையில் இருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க ஊழியர்களின் மோசமான நிலை தொடர்ந்தும் தெர…

20 கிலோ கிராம் அரிசியை தவணை முறையில் வாங்கும் அளவுக்கு துயர நிலையில் இருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க ஊழியர்களின் மோசமான நிலை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் அரசாங்க ஊழியர்கள்தான் கடந்த தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். ஆனால், இன்று அதே அரசாங்க ஊழியர்களைப் பார்த்து அவர்கள் திருடுகிறார்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்துகிறார்கள். அரசாங்க ஊழியர்களுக்கு இவ்வளவு கேவலமான முறையிலும் அவமதிக்கும் வகையிலும் முன்னெப்போதும் எந்தவொரு அரசாங்கமும் நடந்துகொண்டதில்லை.அன்று அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று தவணை முறையில் 20 கிலோ அரிசியைப் பெறும் அளவிற்கு அரசாங்க ஊழியர்களின் நிலைமை மிக மோசமாக  வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் நாட்டை மேலும் மேலும் படுகுழிக்குள் தள்ள முடியுமே தவிர, நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு சாதகமான உத்தியோகப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்பதைத் தான் இவர்களின் நாளாந்த செயல்பாடுகள் நிரூபித்து வருகின்றன. அதேபோன்று, இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறுவதற்கு இந்நாட்டின் விவசாய மக்களும் தங்களின் பெரும்பான்மையான ஆணை மூலம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். ஆனால், இன்று அந்த ஏழை விவசாய மக்களை கசிப்பு உற்பத்தியாளர்கள் என்று கூறி அரசாங்கம் அவமதித்து வருகின்றது. இதுவே இன்று இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.