அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முற…

அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் இலவச சுகாதார சேவையின் மனிதவள வினைத்திறனை  மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சேவை வழங்குதலின் செயல்திறன், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கிலும், மேற்கு மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்காக  சுகாதார உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 627 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

எமது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரை அதிகமானோரை சேவையில் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், தற்போதுள்ள வெற்றிட எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஏறத்தாழ 160,000 பேர் ஏற்கனவே பொதுச்சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில், சுகாதாரப் பணியாளர்கள், இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மற்றும் இரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் பெரும்பாலும் அரசியல் தலையீட்டின் அடிப்படையிலேயே நடைபெற்றன.

சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு மிகவும் வெளிப்படையாகத் வெளிப்படும் விடயமாக சுகாதாரப் பணியாளர்களின் ஆட்சேர்ப்பைக் குறிப்பிடலாம். தற்போதைய அரசாங்கம் அந்த முறையை முற்றிலுமாக மாற்றி, வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சேர்ப்பு செயன்முறையை நிறுவியுள்ளது.