சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக முப்படையினருக்கு வழங்கப்படும் விருதுகள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதால் அவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முப்படைகளின் பல்வேறு பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் நாட்டுக…
சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக முப்படையினருக்கு வழங்கப்படும் விருதுகள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதால் அவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முப்படைகளின் பல்வேறு பதவிகளை வகிக்கும் உறுப்பினர்கள் நாட்டுக்காகச் செய்த அர்ப்பணிப்புகளைப் பாராட்டி வழங்கப்படும் விருதுகள், கடந்த காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்தன. இரத்துச் செய்யப்படும் விருதுகள்அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்ட நபர்கள் மற்றும் மதகுருமார்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில தரப்பினர் என அரசியல் தேவைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட இவ்வாறான பாராட்டு விருதுகளை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது சம்பந்தமாக 2026 .06. 23 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் 'சேவாபிமானி' (Sevabhimani) போன்ற பாராட்டு விருதுகளை வழங்குவது முப்படைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

