அஸ்வெசும பயனாளிகளுக்கும் மிக விரைவில் குறைந்த விலையில் தவணைக் கட்டண முறையில் அரிசி விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க நெற்களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் கையிருப்பை அரிசியாக்கி, ஜாதிக சதொச எனும் புதிய பெயரில் சந்தைக்கு விட அரசாங்கம் நடவடிக்கை மேற்க…
அஸ்வெசும பயனாளிகளுக்கும் மிக விரைவில் குறைந்த விலையில் தவணைக் கட்டண முறையில் அரிசி விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க நெற்களஞ்சியங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் கையிருப்பை அரிசியாக்கி, ஜாதிக சதொச எனும் புதிய பெயரில் சந்தைக்கு விட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அஸ்வெசும திட்டம்
அதன் அடுத்த கட்டமாக அரசாங்க ஊழியர்களுக்கு மாதம் தோறும் 20 கிலோ அரிசியை தவணைக்கட்டண முறையில் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைக்கு அஸ்வெசும பயனாளிகளுக்கும் அதே முறையில் அரிசி விநியோகம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதை விட சலுகை விலையில் அஸ்வெசும பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரசாங்க ஊழியர்கள் போன்றே அஸ்வெசும பயனாளிகளும் தாங்கள் கொள்வனவு செய்யும் அரிசிக்கான கட்டணத்தை தவணைக் கட்டண முறையில் செலுத்த வாய்ப்பளிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

