வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, சாதாரண சேவை பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உய…
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, சாதாரண சேவை பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இலிருந்து ரூ.34 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், அதிகபட்ச கட்டணம் ரூ.2,422 இலிருந்து ரூ.2,902 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, அரை சொகுசு (Semi-Luxury) பேருந்து சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.44 இலிருந்து ரூ.51 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், அதிகபட்ச கட்டணம் ரூ.3,330 இலிருந்து ரூ.4,353 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய பேருந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

