இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, அதிநவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது. இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்…
இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, அதிநவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலதிக விசாரணை ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அத்துருகிரிய - ஹோகந்தர பகுதியில் பொலிசார் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர். அதன்போது குறித்த மோட்டார் சைக்கிள்களும், தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

