இவ்வாண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார். இறுதி அறிவிப்பு இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில்…

இவ்வாண்டின் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.  இறுதி அறிவிப்பு இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எந்தவித உயர்வும் மேற்கொள்ளப்படாது என கடந்த மே 19 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நீர் கட்டணங்கள் மூலம் சபையின் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், ஜனவரி முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருந்தார்.இதன்படி, நீர் கட்டண மாற்றம் குறித்த இறுதி அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.