'டிட்வா' (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்த…

'டிட்வா' (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்தினார்:

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதன் காரணமாக, அவசரகாலச் சட்டத்தை இம்மாதத்துடன் முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இம்மாத இறுதியில் இந்த அவசரகால ஒழுங்குவிதிகள் தானாகவே காலாவதியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.