அவதூறு விவகாரம்: சட்ட நடவடிக்கை ஆரம்பம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக…

அவதூறு விவகாரம்: சட்ட நடவடிக்கை ஆரம்பம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த 14 பேருக்கும் எதிராக, நிகழ் நிலை காப்பு சட்டத்தின் கீழ், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கு மீதான பரிசீலனை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது அவதூறு பரப்பிய தனி நபர்கள், அதற்கு துணை புரிந்தவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூப், டிக்டொக் மற்றும் முகநூல் பயனர்களுக்கும் எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.