களுத்துறை வாதுவ பகுதியில் உள்ள வங்கி வலயமொன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரத்திற்கு முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்,…
களுத்துறை வாதுவ பகுதியில் உள்ள வங்கி வலயமொன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரத்திற்கு முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வாதுவ காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடிகமுவ, பிட்டுகல்தெனிய பகுதியைச் சேர்ந்தவரும், மற்றையவர் அட்டால பகுதியைச் சேர்ந்தவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு கவனம் பெற்றிருந்தது.

