அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிக்கு (1,454 அடி), ரஷியாவை சேர்ந்த இவான் - ஆஞ்சலா என்ற காதல் ஜோடி எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான முறையில் ஏறிச் சென்றுள்ளனர். அந்தரத்தில் நின்றபடி உலக அமைதி குறித்த வாசகங்கள் அ…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தின் உச்சிக்கு (1,454 அடி), ரஷியாவை சேர்ந்த இவான் - ஆஞ்சலா என்ற காதல் ஜோடி எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான முறையில் ஏறிச் சென்றுள்ளனர். அந்தரத்தில் நின்றபடி உலக அமைதி குறித்த வாசகங்கள் அடங்கிய கொடியை பறக்கவிட்ட அவர்கள், அங்கேயே ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதை கண்டு கீழே நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததற்காகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும் அந்த சாகச ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கோர்ட்டுக்கு வெளியே வந்த அவர்களிடம், பத்திரிகையாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் "முத்தமிட விரும்புகிறீர்களா?" எனக் கேட்க, அங்கேயே அந்த தம்பதி உற்சாகமாக முத்தங்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, காதலர்களுக்கிடையில் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

