நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் நேர்காணல் ஒன்றில், தனது முதல் காதல் குறித்த மர்மமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, 'சந்திரலேகா' திரைப்படம் மூலம் அறிமுகமானபோது ரசிகர்களால் "ஹோம்லி க…

நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் நேர்காணல் ஒன்றில், தனது முதல் காதல் குறித்த மர்மமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, 'சந்திரலேகா' திரைப்படம் மூலம் அறிமுகமானபோது ரசிகர்களால் "ஹோம்லி கேர்ள்" என்று கொண்டாடப்பட்டார். ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. நடிகர் ஆகாஷ் மற்றும் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் ஆகியோருடனான திருமண உறவுகள் விவாகரத்தில் முடிந்தன. தொடர்ந்து, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடனான காதலும், பீட்டர் பால் உடனான திருமணமும் தோல்வியில் முடிந்து தற்போது அவர் தனிமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் தனது முதல் காதல் பற்றிப் பேசிய வனிதா, "தன்னுடைய முதல் காதல் குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது. அந்த ரகசியத்தை நான் வெளியே சொன்னால், மொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அந்த காதல் நினைவுகள் எனக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கும். அந்த நபர் யார் என்பது எனக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா கூறிய இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், "நீங்கள் சொல்லும் அந்த ரகசியம் என்னவென்று எங்களுக்கு ஓரளவு புரிந்துவிட்டது. உங்கள் ரகசியம் பத்திரமாக இருக்கட்டும். ஒருவேளை நீங்கள் அவரைத் திருமணம் செய்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் விவாகரத்துகளே வந்திருக்காது," என்று சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.