ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை பங்களிப்பு கொடுப்பனவுகள் பற்றிய விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட சகல நிறுவனங்களும் தமது ETFபங்களிப்பு கொடுப்பனவுகள் மற்றும் மாதாந்த அறிக்கைகளை இனிமேல் முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க…
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை பங்களிப்பு கொடுப்பனவுகள் பற்றிய விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
15 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட சகல நிறுவனங்களும் தமது ETFபங்களிப்பு கொடுப்பனவுகள் மற்றும் மாதாந்த அறிக்கைகளை இனிமேல் முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட வேண்டிய ETFபங்களிப்பு கொடுப்பனவிலிருந்து இந்த கட்டளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் அறிவித்துள்ளது.டிஜிட்டல் வங்கிச் சேவைஇதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது வணிக வங்கிகள் ஊடாக டிஜிட்டல் வங்கிச் சேவை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வங்கிகளில் கணக்குகள் இல்லாத தொழில் வழங்குநர்கள் வேறு வங்கியின் ஊடாக நேரடி பற்று முறையை பயன்படுத்தி ETF பங்களிப்பு கொடுப்பனவுகளை செலுத்தலாம்.
இதுபற்றிய மேலதிக தகவல்கள ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் தலைமை அலுவலகத்திலும் அருகிலுள்ள பிராந்திய அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தையும் நாடலாம். அதன் முகவரி www.etfb.lk என்பதாகும்.

