எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (10.09.2025) பி…
எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (10.09.2025) பி.ப 02.30 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை கள், ஒழுங்கமைப்பு க்கள், தொழிலற்றோருக்கான அறிவித்தல்களும் அவர்களை தொழிற் சந்தைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் போன்றன தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களினால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

