சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சுரேஷ் சலே,…

சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே, தன்மீது நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் மற்றும் தகவல்களை தொடர்ந்து மறைக்க முயற்சித்தால், அதற்கான சட்டரீதியான விளைவுகளையும் அவர் எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் எச்சரித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்படும் அனைத்து நபர்களும் நீதிமன்றத்தின் ஊடாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய எவரும் எந்தச் சூழ்நிலையிலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.