உலகக்கிண்ண 2026 கால்பந்து தொடரில், நடுவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் இரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர். போஸ்னியாவுக்கு எதிரான போட்டியில், எதிரணி வீரரின் கணுக்காலை மிதித்ததாகக் கூறி அமெரிக்க வீரர் ஃபோலாரின் பாலோகனுக்கு வி.ஏ.ஆர். பரிசோதனைக்குப் பின் சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளத…
உலகக்கிண்ண 2026 கால்பந்து தொடரில், நடுவர்களின் ஒருதலைப்பட்சமான முடிவுகளால் இரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
போஸ்னியாவுக்கு எதிரான போட்டியில், எதிரணி வீரரின் கணுக்காலை மிதித்ததாகக் கூறி அமெரிக்க வீரர் ஃபோலாரின் பாலோகனுக்கு வி.ஏ.ஆர். பரிசோதனைக்குப் பின் சிவப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற விதி மீறலை அர்ஜென்டினா லியோனல் மெஸ்ஸி செய்தபோது, நடுவர்கள் அவருக்கு மஞ்சள் அட்டை கூட காட்டாமல் சாதாரண பிரீ கிக் மட்டுமே வழங்கியுள்ளனர்.
இந்நிலையில்,பிரபலமான வீரர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா?" என பிபாவின் இரட்டை நிலையை இரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

