ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தனது புதல்வன் ரகித ராஜபக்சவுக்குத் தொடர்பிருப்பதை அம்பலப்படுத்திய நபருக்கு எதிராக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச போலி முறைப்பாடு செய்துள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. பொலிசாரின் தடுப்புக் காவலில் உள்ள ஹரக் கட்டாவுக்க…
ஹரக் கட்டாவின் மனைவியிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தனது புதல்வன் ரகித ராஜபக்சவுக்குத் தொடர்பிருப்பதை அம்பலப்படுத்திய நபருக்கு எதிராக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச போலி முறைப்பாடு செய்துள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
பொலிசாரின் தடுப்புக் காவலில் உள்ள ஹரக் கட்டாவுக்கு விசேட சலுகைகள் வழங்குதல், அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து சாதாரண சிறைச்சாலையொன்றுக்கு மாற்றம் செய்தல் மற்றும் வழக்குகளில் சலுகை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக ஹரக் கட்டாவின் மனைவியிடம் இருந்து ஆயிரத்து இருநூறு மில்லியன் ரூபா பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஹரக் கட்டாவின் மனைவி இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலும், அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஹரக் கட்டா உள்ளிட்ட கைதிகளுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் கடந்த 2024ம் ஆண்டிலேயே முதன்முதலாக தகவல்கள் கசிந்துள்ளது. இச்சம்பவத்தை முதன்முதலில் அம்பலப்படுத்திய யூடியூப் சேனலுக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்துள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
அனுப எரஞ்சித் என்ற நபர் இந்தச் சம்பவத்தை தனது சமூக வலைதளம் மூலம் முதலில் வெளிப்படுத்தியுள்ளார்.விஜேதாச போலி முறைப்பாடுஇருப்பினும், அப்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அனூப எரஞ்சித் என்ற நபர் ஒரு ஆபாச இணையதளத்தை நடத்தி வருவதாக அப்போது சட்டமா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். பின்னர்இ அந்த நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சமூக வலைத்தள செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அது மாத்திரமன்றி தனது புதல்வர் சம்பந்தப்பட்டுள்ள குறித்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியில் கசியாமல் இருக்க முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தனது அமைச்சுப் பதவியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தகவல்களை மூடிமறைக்க முயன்றுள்ள விபரமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

