மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவெல்ல பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு நேற்று (30) கிடைத்த இரகசிய தகவலின்படி நடத்தப்பட்ட சோதனையில், ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 107 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரத…
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவெல்ல பகுதியில் வலானை மத்திய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளுக்கு நேற்று (30) கிடைத்த இரகசிய தகவலின்படி நடத்தப்பட்ட சோதனையில், ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
107 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கிடைக்கபெற்ற 2,561,100 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட 53 வயதுடைய சந்தேகநபர் மொரட்டுவெல்ல பகுதியை சேர்ந்தவர் ஆவார். மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளில் மொரட்டுவை பொலிஸாரால் ஈடுபட்டு வருகின்றனர்.

