ஹோகந்தரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து அதிவேக (Superbikes) மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இந்த ம…

ஹோகந்தரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து அதிவேக (Superbikes) மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விசாரணையின் போது, இந்த ஐந்து மோட்டார் சைக்கிள்களும் முறையான பதிவு ஆவணங்கள் இன்றி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஐந்து மோட்டார் சைக்கிள்களில், இரண்டில் போலி இலக்கத்தகடுகள் (Fake number plates) பொருத்தப்பட்டிருந்தது பொலிஸாரின் கவனத்திற்கு வந்தது.

வாகனங்களை மறைத்து விற்பனை செய்யும் நோக்கில் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த போலித் தகடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய ஹோகந்தரை பிரதேசவாசி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.