கொழும்பிலிருந்து பேருந்தில் வந்து ஹொரணையில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்து கைபேசியை திருடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி அதிகாலை நேரத்தில் ஹொரணை நகரில் உள்ள ஒரு கைபேசிக் கடை மற்றும் உணவகத்தில் மர்ம நபரொருவர் புகுந்து திருடியுள்ளதாக பொலிஸாருக…

கொழும்பிலிருந்து பேருந்தில் வந்து ஹொரணையில் உள்ள ஒரு கடைக்குள் புகுந்து கைபேசியை திருடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜுன் மாதம் 24ம் திகதி அதிகாலை நேரத்தில் ஹொரணை நகரில் உள்ள ஒரு கைபேசிக் கடை மற்றும் உணவகத்தில் மர்ம நபரொருவர் புகுந்து திருடியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றிருந்தது.  திருட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைஇந்த திருட்டு தொடர்பாக நடத்தப்பட்ட பத்து நாள் விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த பகுதி குறித்த தகவல் தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். சம்பவ நடந்த தினம், கொழும்பிலிருந்து ஹொரணையிற்கு வந்த கடைசிப் பேருந்தில் சந்தேக நபர் தனியாக வந்ததோடு, வீடுகளை உடைத்துக்கொண்டு நுழையப் பயன்படுத்தப்படும் ஒரு இரும்புத் துண்டையும் கொண்டு வந்திருந்தார்.

தொலைபேசிக் கடையின் கண்ணாடிக் கதவின் பூட்டை உடைத்து அங்கிருந்த நவீன தொலைபேசிகளைத் திருடியதாகவும், அதன் பின்னர் அருகிலிருந்த உணவகத்தின் உருளும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, அறுபத்தாறாயிரம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சொக்லேட்டுகள், சிகரெட்டுகள் மற்றும் பிற பொருட்களைத் திருடியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களுடன் இந்த நபர் ஹொரானாவிலிருந்து பேருந்தில் கொழும்புக்குத் திரும்பிச் சென்றுள்ளார்.வீடு உடைப்பு உட்பட 15 குற்றங்கள் இந்த சந்தேக நபர், 1993 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் வீடு உடைப்பு உட்பட 15 குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பத்து நாட்கள் விசாரணையின் முடிவில் சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட நவீன கைபேசிகளுடன் பிரதான சந்தேக நபரையும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த இரண்டு நபர்களையும் ஹொரணை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவரும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் வைத்திருந்த இரண்டு நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

விசாரணைகளின் முடிவில் சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.