கட்டாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சு சிறந்த முறையில் நடைபெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்பட…
கட்டாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சு சிறந்த முறையில் நடைபெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரிநிதிகள் நேரடியாக ஒருவரையொருவர் சந்திக்காமல் மறைமுகப் பேச்சுக்கள் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கத்தார் அரசு பரிசளித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் மூலம் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று டோஹாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டோஹாவில் ஈரான் உடன் சிறந்த முறையில் பேச்சு நடைபெற்று வருதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலவரப்படி டோஹாவில் சிறந்த முறையில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார். (a)

