ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்ட நிலையில் இவரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை 4ஆம் திகதி ஆரம்பித்து, 9ஆம் திகதி அவரது உடல் மஷ்ஹாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர…

ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்ட நிலையில் இவரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை 4ஆம் திகதி ஆரம்பித்து, 9ஆம் திகதி அவரது உடல் மஷ்ஹாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணங்கள் இருப்பதால் அவர் இதில் பங்கேற்கவில்லை.

மேலும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய அரசு சார்பில் இரு உயர்மட்ட பிரதிநிதிகளான பீகார் மாநில கவர்னர் சையத் அதா ஹஸ்னைன், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ளனர்.