படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோ…

படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி ஆகியோர் தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை ஈரான் அரசாங்கத்தினர் இராஜதந்திர மரியாதைகளுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதன்போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் எம்.ஐ. பசீஹா அஸ்மியும் உடனிருந்தார்.