பிரபல நடிகை கயாடு லோஹர், எதிர்கொண்ட பாலியல் தொல்லை (ஈவ்-டீசிங்) குறித்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். தனது 10-ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில், இளைஞன் ஒருவன் தினமும் தன்னைத் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாக நடிகை குறிப்பிட்டுள்ளார். முதல் இரு நாட…
பிரபல நடிகை கயாடு லோஹர், எதிர்கொண்ட பாலியல் தொல்லை (ஈவ்-டீசிங்) குறித்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார்.
தனது 10-ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில், இளைஞன் ஒருவன் தினமும் தன்னைத் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்ததாக நடிகை குறிப்பிட்டுள்ளார். முதல் இரு நாட்கள் அதனைப் புறக்கணித்த கயாடு லோஹர், மூன்றாவது நாள் அந்த நபர் எல்லையை மீறி அநாகரிகமாக நடந்துகொள்ள முயன்றபோது, மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார்.
"இனியும் பொறுமையாக இருக்கக் கூடாது" எனத் தீர்மானித்த அவர், யோசிக்காமல் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து அந்த இளைஞனின் தலையில் வீசியெறிந்துள்ளார். இதில் அந்த நபரின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. எந்தவித அச்சமுமின்றி வீட்டிற்குச் சென்ற அவர், இச்சம்பவம் குறித்துத் துணிச்சலுடன் விவரித்துள்ளார்.
"தவறு செய்பவர்களைக் கண்டு பெண்கள் அமைதியாக இருக்கக் கூடாது; அநீதியைத் துணிச்சலுடன் எதிர்க்க வேண்டும்" என நடிகை கயாடு லோஹர் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தப் பேட்டி, சமூக வலைதளங்களில் பலரது பாராட்டைப் பெற்றுவருகிறது.

